செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈசிஆர்-ல் இளம்பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்று விவகாரம் : 6 பேர் கைது

05:27 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஈசிஆர் சாலையில் இளம்பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்று அச்சுறுத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்று அச்சுறுத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், இதுதொடர்பாக கானாத்தூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த கார்கள் இருப்பது தெரியவந்தது.

Advertisement

அதனடிப்படையில் கார்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரி மாணவர் சந்துருவை கைது செய்த நிலையில் தற்போது மேலும் 5 பேரை கைது செய்துள்ளனர். சந்துரு மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான மூவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பள்ளிக்கரணை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் விளக்கமளித்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பின்னர் உடனடியாக சிஎஸ்ஆர் காப்பி கொடுக்கப்பட்டதாகவும், வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும் ஈசிஆர் பகுதியில் 3 ரோந்து வாகனங்கள் செயல்படுவதாக கூறிய கார்த்திகேயன், அங்கு செல்ல மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
ecr issueECR: 6 people arrested after chasing the car of young girlsMAIN
Advertisement