ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து - சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!
03:17 PM Dec 25, 2024 IST
|
Murugesan M
பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஈபிள் கோபுரத்தைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 7 பில்லியன் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈபிள் கோபுரத்தில் உள்ள மின் தூக்கியின் வழித்தடத்தில் தீ விபத்து விடப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ அணைக்கப்பட்டு நிலைமை சீரானதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement