ஈரான் : சென்னிறத்தில் பாய்ந்தோடிய மழைநீர் - வைரல் வீடியோ!
01:23 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
ஈரானில் பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளம் செந்நிறத்தில் கடலில் கலந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
ஹோர்மோஸ் தீவில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மழை வெள்ளம் செந்நிறத்தில் பாய்ந்தோடி கடலில் கலந்தது.
இதனால் கடற்பகுதியும் செந்நிறமாக காட்சியளித்த நிலையில், மழை வெள்ளம் ரத்த சிவப்பில் பாய்ந்தோடிய காட்சி வைரலாகி வருகிறது. இந்நிலையில், அத்தீவின் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகளவு இருப்பதால் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக விளக்கமளித்துள்ள விஞ்ஞானிகள், இது ஒரு இயற்கையின் அதிசயங்களில் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement