ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் முடக்குவாத நோயாளிகள் - மருத்துவர் இல்லாததால் அவதி!
10:31 AM Nov 23, 2024 IST | Murugesan M
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முடக்குவாத நோயாளிகள் சிகிச்சைக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் முடக்குவாத நோய்க்காக சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் முடக்குவாத நோய்க்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்.
Advertisement
இதனால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருப்பதுடன், மருத்துவரும் பணிச் சுமைக்கு ஆளாகி வருகிறார். ஆகையால், முடக்குவாத சிகிச்சைக்காக நிரந்தர மருத்துவரை நியமிக்கவும், கூடுதல் நாட்கள் சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement