செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்? - அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்!

03:34 PM Jan 21, 2025 IST | Sivasubramanian P

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர், மதுரை மாநகராட்சியுடன் பேரூராட்சி, ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொடுக்க முடியவில்லை, புதிதாக பகுதிகள் இணைக்கப்பட்டால் எப்படி அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது.நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை. மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. திமுக பாடுபட்டது.ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல மக்களை அடைத்து வைத்து ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். இதனால் தற்போது தேர்தலில் போட்டியிடவில்ல் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Advertisement
Tags :
AIADMK votesErode East constituency by electionformer Minister Sellur RajuMaduraiMAINNaam Tamilar katchi
Advertisement
Next Article