ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
Advertisement
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5- ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக 237 வாக்குச்சாவடிகளில் 852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியார் முன்பாக, பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.