செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாளை வாக்குப்பதிவு!

06:13 AM Feb 04, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

Advertisement

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Advertisement

Advertisement
Tags :
DMKerode east by electionerode east by election 2025erode tommrow pollingFEATUREDMAINNaam Tamilar katchi
Advertisement