ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கள்ள ஓட்டு போட்டவரை கையும் களவுமாக பிடித்த அதிமுக நிர்வாகி!
06:23 AM Feb 06, 2025 IST
|
Sivasubramanian P
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபரை அதிமுக நிர்வாகி கையும் களவுமாக பிடித்தார்.
Advertisement
வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சவாடியில், பரிதா பேகம் என்பவரின் வாக்கினை வேறொருவர் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கள்ள ஓட்டு போட்டு வெளியே வந்தபோது, அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கையும் களவுமாக பிடித்து ஈரோடு நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
Advertisement
Advertisement