ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேமுதிக புறக்கணிப்பு!
05:30 PM Jan 11, 2025 IST
|
Murugesan M
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக தேமுதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : "இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
அதே மணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article