செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி!

04:49 PM Jan 20, 2025 IST | Murugesan M

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளராக சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

Advertisement

வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று 8 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரே சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் கேட்கும் பட்சத்தில், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
47 candidates contest in Erode East by-election!election equations in erodeerode assembly electionerode by electionerode byelectionerode east by electionerode east by election candidateerode east electionerode east election newserode electionerode election dateerode election date newserode election round uperode electionsFEATUREDMAINnews in erode election date
Advertisement
Next Article