செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்! : நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

11:03 AM Jan 14, 2025 IST | Murugesan M

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வரும் பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக  மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
erode by electionMAINNTKseeman
Advertisement
Next Article