ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு!
06:00 PM Dec 17, 2024 IST | Murugesan M
சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், கடந்த 14-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால், அத்தொகுதிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement