ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமது வாக்கை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் புகார்!
01:23 PM Feb 05, 2025 IST
|
Murugesan M
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வளையக்கார வீதி பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பரிதா பேகம் என்ற பெண் தனது வாக்கினை பதிவுசெய்ய வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். அப்போது அவரது அடையாள அட்டையை பெற்ற அலுவலர்கள், ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டிருப்பதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
Advertisement
இதனால் அதிர்ச்சியடைந்த பரிதா பேகம், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து புகாரளிக்க போவதாகவும் தெரிவித்தார்.
Advertisement