ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து குழப்பமான சூழல் நிலவி வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த முறை திமுக போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.