ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிமுக அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளகளிடம் பேசிய எட்ப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியா ? அல்லது புறக்கணிப்பா என்பது தொடர்பான முடிவெடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியுள்ளது.