ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஈரோட்டில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இறுதி நாளில் திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதன்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார், கூட்டணி கட்சியினருடன் வந்து, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய நாதக வேட்பாளர் சீதாலட்சுமி முடிவு செய்தார். ஆனால், ஊர்வலமாக செல்ல சீதாலட்சுமி உள்ளிட்ட நாதகவினருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து சீதாலட்சுமி மட்டும் தனது காரில் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.