செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

01:00 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியில் செல்வாக்கான கட்சிகள் கொட்டை அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், பிற கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும், வார்டு வாரியாக கொட்டகைகள் அமைத்து அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு, வாக்குக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே, தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொட்டகை அமைக்கும் நடைமுறை தொடருமோ என்ற அச்சத்தால் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,

அந்த மனுவில் தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கே.பி.எம்.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனவரி 8-ம் தேதி அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வாக்காளர்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்களில் யார்தான் சலுகைகள் வழங்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement
Tags :
Election commissionErode East constituency by electionMadras High Court ordersMadras High Court orders the Election CommissionMAINஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
Advertisement