ஈரோடு ஜவுளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல் - வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
03:08 PM Dec 05, 2024 IST | Murugesan M
ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அப்துல் கனி ஜவுளி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளி வளாகமாக மாற்றப்பட்டது.
Advertisement
மேலும், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இங்கு லிப்ட், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படாததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement