செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு : மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறு!

12:03 PM Apr 01, 2025 IST | Murugesan M

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் சாலையின் நடுவே காரை நிறுத்தி, அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பவானி நோக்கி இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து, சித்தோடு வழியாகச் சென்றது. அப்போது முன்னாள் சென்ற கார் ஓட்டுநர் வழி விடாததால் அரசு பேருந்து ஓட்டுநர் ஹார்ன் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் காரை சாலையின் நடுவே நிறுத்தி இறங்கி வந்த ஓட்டுநர், அரசு பேருந்தை மறித்து, ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார்.

Advertisement

அப்போது அங்குத் திரண்ட பொதுமக்கள், மது போதையிலிருந்த அந்த நபரைக் கண்டித்து எச்சரித்ததால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement
Tags :
Erode: Argument with government bus driver while intoxicated!MAINஈரோடு
Advertisement
Next Article