ஈரோடு அருகே இபிஎஸ் உறவினர்கள் தொடர்பான இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை!
02:15 PM Jan 08, 2025 IST
|
Murugesan M
ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில், இபிஎஸ்- ன் சகோதரி மகன் வெற்றிவேலுக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு ஆலையில், நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை தற்போதுவரை நீடித்து வருகிறது.
இதேபோல, செட்டிப்பாளையத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வேலாங்காட்டுவசு பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
2 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Next Article