செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் "கீழ் வழங்கப்பட்ட பட்டா இங்கே! இடம் எங்கே? : பொதுமக்கள் வேதனை

03:29 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வாடிப்பட்டி பகுதியில் "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்" கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கடந்த 2021ஆம் ஆண்டு "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்" கீழ் 3 சென்ட் இடத்திற்கான பட்டாக்களை அமைச்சர் மூர்த்தி வழங்கியுள்ளார்.

பட்டா வழங்கப்பட்டு 4 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரை அதிகாரிகள் இடத்தைக் காட்டவில்லை எனக் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
Here is the patta issued under the "Chief Minister's Scheme" in your constituency! Where is the place? : Public anguishMaduraiMAIN
Advertisement