செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு - குடியரசு தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

11:17 AM Nov 11, 2024 IST | Murugesan M

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை நியமிக்கவும் அவர் பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று கடந்த மாதம் 24-ம் தேதி, சஞ்சீவ் கன்னாவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

Advertisement

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு மே 13-ம் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Chief Justice of the Supreme CourtFEATUREDMAINPresident Drabupati Murmusanjiv KhannaTY Chandrachud retired
Advertisement
Next Article