செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உடல்நலக்குறைவு காரணமாக ஏ.ஆர்.ரகுமானை பிரிய முடிவு செய்தேன் - மனைவி சாய்ரா பானு விளக்கம்!

04:50 PM Nov 24, 2024 IST | Murugesan M

உடல்நலக் குறைவு காரணமாகவே ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு விளக்களித்துள்ளார்.

Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்தார். இதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்த நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

அந்த ஆடியோவில் உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் மீது யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

ஏ.ஆர்.ரகுமான் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள சாய்ரா பானு, கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை காரணமாக ஏ.ஆர்.ரகுமானை தொந்தரவு செய்ய விரும்பாததால் அவரைப் பிரிய முடிவு செய்துள்ளதாக சாய்ரா பானு விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Tags :
A.R. Rahman divorceA.R. Rahman's wife Saira BanuFEATUREDMAINSaira Banu audio on split
Advertisement
Next Article