செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை!

04:43 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாகை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாலன் என்பவர், கடந்த 23- ம் தேதி விபத்தில் சிக்கினார். முதலில், ஒரத்தூரிலும், பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி வீரபாலன் மூளை சாவு அடைந்தார். இதனையடுத்து, அவரது பெற்றோர் சம்மதத்துடன், நுரையீரல், இதயம், கல்லீரல், கண்கள், தோல் மற்றும் கிட்னி உள்ளிட்டவை 7 நபர்களுக்கு பொருத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில், இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்ட வீரபாலன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அரசு சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Advertisement
Tags :
District Collector respects the body of the young man who donated body parts on behalf of the government!MAINtamil janam tv
Advertisement