உடுமலை அருகே பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை!
உடுமலை அருகே பள்ளி மாணவி உட்பட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குறிச்சி கோட்டையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தர்சனா, 3 நாட்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், மாணவியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மானுபட்டி பகுதியில் உள்ள குளத்தில் பெண் உட்பட 3 பேரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்று சடலங்களை மீட்ட நிலையில், உயிரிழந்தது மாணவி தர்சனா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆகாஸ், மாரிமுத்து என்பது தெரியவந்தது.
ஆகாஸுக்கும் தர்சனாவுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தளி காவல்நிலைய போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.