உணவகத்தில் கெட்டு போன சிக்கன் பிரியாணி : வாடிக்கையாளர் சரமாரி கேள்வி!
05:37 PM Mar 31, 2025 IST
|
Murugesan M
கள்ளக்குறிச்சி அருகே தனியார் உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி கொடுத்ததாகக் கூறி உரிமையாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Advertisement
கள்ளக்குறிச்சி - சேலம் பிரதான சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் மணிகண்டன் என்பவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். பிரியாணியைச் சாப்பிட முயன்றபோது அது கெட்டுப்போன நிலையில் இருந்ததால், உடனடியாக உணவக உரிமையாளருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உணவக உரிமையாளர் சமாதானப்படுத்தியும் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
Advertisement
Advertisement