உணவகத்தில் வெடித்து சிதறிய பிரிட்ஜ் - கேஸ் சிலிண்டரும் வெடித்ததால் தீயை அணைக்க கடும் போராட்டம்!
07:30 PM Dec 08, 2024 IST
|
Murugesan M
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உணவகத்தில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததில் உணவகம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
Advertisement
திருமயம் தாலுகா அலுவலகம் அருகே விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து மேலும் தீ பரவ தொடங்கியது. இதனையடுத்து சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Advertisement
Advertisement
Next Article