உதகையில் முழு அடைப்பு : வாகனங்களில் உறங்கும் சுற்றுலாப் பயணிகள்!
07:25 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
நீலகிரி மாவட்டம் உதகையில் முழு அடைப்பு காரணமாக விடுதிகள் கிடைக்காததால் வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் உறங்கும் அவலநிலை ஏற்பட்டது.
Advertisement
நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் 24 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் அடைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் அவர்கள் விடுதி வாசலிலேயே தங்கள் குழந்தைகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Advertisement
அதேபோல் இளைஞர்கள் பலரும் தங்களின் இருசக்கர வாகனத்தின் மீது படுத்து உறங்கும் அவலநிலையும் ஏற்பட்டது.
Advertisement