உத்தரபிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 6 தொகுதிகளில் பாஜக வெற்றி!
உத்தரபிரதேசத்தில் நடந்துமுடிந்த 9 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
Advertisement
உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், 6 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
காசியாபாத் தொகுதியில் சஞ்சீவ் சர்மா, கைர் தொகுதியில் சுரேந்தர் தில்லர், புல்பூர் தொகுதியில் தீபக் படேல், காதேஹரி தொகுதியில் தர்மராஜ் நிசாத், மஜாவன் தொகுதியில் சுஷிமிதா மயூரா ஆகிய பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும், மீராபூர் சட்டசபை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் மித்லேஷ் பால் வெற்றி பெற்றார்.
அதேபோல, கார்கல் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பிரதாப் சிங்கும், சிஷாமா தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நசீம் சோலங்கியும் வெற்றி பெற்றனர்.