செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி - சிறப்பு கட்டுரை!

08:00 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் கற்றல் தரத்தில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாடு பின் தங்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

ஆண்டுதோறும், நாட்டின் கல்வி நிலை குறித்த ஆய்வறிக்கையை, ASER வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ASER அறிக்கை கடந்த செவ்வாய் கிழமை வெளியிடப் பட்டது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நடத்தப் பட்ட இந்த ஆய்வுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 30 கிராமங்களையும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் இருபது குடும்பங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Advertisement

நாடு முழுவதும் உள்ள 605 கிராமங்களில் கிட்டத்தட்ட 6.5 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயதிலான 28,984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாம் வகுப்பு குழந்தைகளின் வாசிப்பு நிலை கணிசமாக முன்னேறி 27.1 சதவீதத்தை எட்டியுள்ளது. அதிலும், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், கேரளா, உத்தர பிரதேசம், ஹரியானா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் குழந்தைகளின் வாசிப்பு நிலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அறிக்கை கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 35 சதவீத பேருக்கும், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 64 சதவீத பேருக்கும், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா,பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி உள்ளதாக தெரிவித்துள்ள அறிக்கை, கர்நாடகாவும் ,தெலங்கானாவும் தமிழ்நாட்டை விட பின்தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கல்வியறிவு குறித்து செய்யப்பட்ட ஆய்வில், 14 வயது முதல் 16 வயதிலான சிறுவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் 36.2 சதவீத ஆண் குழந்தைகளும், 26.9 சதவீத பெண் குழந்தைகளும் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். சுமார் 82.2 சதவீத குழந்தைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் வாங்கித் தருவதில், பெற்றோர்கள், ஆண் பெண் பாகுபாடு காட்டுவதையும் ASER அறிக்கை சுட்டிக் காட்டியுளளது. சுமார் 82.2 சதவீத குழந்தைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள், ஸ்மார்ட்போன்களை கல்வி கற்று கொள்வதற்காக பயன்படுத்தும் விகிதம் தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சமூக ஊடக கணக்குகளை BLOCK செய்யவும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்துள்ளது.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு திறன் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை அதிகரித்துள்ளதையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், சராசரி மாணவர் வருகை 75.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், ஆசிரியர்களின் சராசரி வருகை 87.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு குழந்தைகளின் வாசிப்பு நிலை கணிசமாக முன்னேறி 27.1 சதவீதத்தை எட்டியுள்ளது அதே சமயம், 4ம் வகுப்பு குழந்தைகளின் வாசிப்பு திறன் 48.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. எண்கணித திறன்கள் வளர்ச்சியும் 30 சதவீத முன்னேற்றத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, அடிப்படை கழித்தல் திறன் கொண்ட தரம் 3 வகுப்பு குழந்தைகளின் விகிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் 25.9 சதவீதமாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய கிராமப்புறங்களில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே அடிப்படை பாடப் புத்தக வாசிப்பு மற்றும் எண் கணிதத்தில் சிறிது முன்னேற்றம் இருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகளை மேம்படுத்துவதில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2021ம் ஆண்டு மத்திய அரசால், நிபுன் பாரத் மிஷன் தொடங்கப் பட்டது. இது, அனைத்து குழந்தைகளுக்கும் 2ம் வகுப்பு முடிவதற்குள் புரிதல் மற்றும் எண்கணிதத்தில் நிபுணத்துவம் அளிக்கும் திட்டமாகும்.

2027ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்கணித திறனை இந்திய குழந்தைகளுக்கும் உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 மற்றும் 2025-க்கு இடையில், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 9,235 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சி, மதிப்பீடுகள் மற்றும் உயர்தர கற்றல் கருவிகளுக்காக ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. அரசுப் பள்ளிகளில் வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ASER அறிக்கை வெளிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட கல்வி சீர்திருத்தத்தின் வெற்றியை இந்த அறிக்கை, எடுத்துக் காட்டுகிறது என்றே சொல்லவேண்டும்.

Advertisement
Tags :
ASER Education Status ReportFEATUREDMAHARASHTRAMAINnational rankingPunjaTamil NaduTamil Nadu behind uputtar pradeshUttarakhand
Advertisement