செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உத்தரப்பிரதேசம் : பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து!

05:10 PM Mar 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் தீ விபத்து ஏற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement

நொய்டாவின் சூரஜ்பூரில் இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடமே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement

தீயை முழுமையாக அணைத்த பின்னரே உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது தெரியவரும் எனக் கூறப்படும் நிலையில் இந்த தீ விபத்துக்கு மின்கசிவு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement
Tags :
MAINUttar Pradesh: Sudden fire in plastic factory!உத்தரப்பிரதேசம்பிளாஸ்டிக் தொழிற்சாலை
Advertisement