செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உத்திரமேரூர் அருகே சீரமைக்கப்படாத மதகுகள் - சுமார் 500 ஏக்கர் நிலம் தரிசாகும் அபாயம்!

02:30 PM Oct 27, 2024 IST | Murugesan M

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதகுகள் சீரமைக்கப்படாததால், நீரின்றி 500 ஏக்கர் நிலம் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் பெருங்கோழியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் நீரை நம்பி சுமார் 500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்வதாக கூறுகின்றனர்.

தற்போது ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஏரியின் மதகுகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் மதகுகள் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, மதகுகளை சீரமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINnon-maintenance of sluicesPerungozhiUttaramerur
Advertisement
Next Article