உயர் மின்னழுத்த கேபிள் பழுது - எண்ணூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தம்!
11:29 AM Dec 20, 2024 IST
|
Murugesan M
உயர் மின்னழுத்த கேபிள் பழுது காரணமாக சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
Advertisement
எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கேபிள், பழுது ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இன்று காலை 7 மணியிலிருந்து எண்ணூர் ரயில் நிலையத்தில் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் புறநகர் ரயில்கள் மட்டும் இயக்கப்படும் நிலையில், கும்மிடிப்பூண்டி மார்க்கம் செல்லும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார கேபிளில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
Next Article