செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உயிரிழந்த கோயில் யானைக்கு நயினார் நாகேந்திரன் அஞ்சலி!

03:16 PM Jan 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Advertisement

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்நிலையில் காந்திமதி யானைக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. யானை நிற்க முடியாமல் படுத்த படுக்கையான யானையை, கிரேன் மூலம் தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் காந்திமதி யானையால் நிற்க முடியாததால், கால்நடை மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தது.

காந்திமதி யானையை புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தும் அதனை அரசு கண்டு கொள்ளாததே உயிரிழப்புக்கு காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெல்லை மக்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த கோயில் யானை காந்திமதியின் உயிரிழப்பு, பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனிடையே யானை காந்திமதி உயிரிழந்ததன் காரணமாக, கோயில் நடை சாத்தப்பட்டது.

Advertisement
Tags :
deceased temple elephantMAINNainar Nagendran
Advertisement