உயிரிழந்த நபரின் உடலைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதி!
06:15 PM Apr 12, 2025 IST
|
Murugesan M
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சடலத்தைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
Advertisement
சென்னிமலைப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பிக் காணப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த செல்வம் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலைப் புதைக்கத் தோண்டிய குழிக்குள் தண்ணீர் மீண்டும் மீண்டும் நிரம்பியது. இதனால் அவதியடைந்த உறவினர்கள் தண்ணீரை வாளி மூலம் இறைத்த பின்னர் உடலை அடக்கம் செய்தனர்.
Advertisement
Advertisement