செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உரிமையாளர் வீட்டை சேதப்படுத்திய வாடகைக்கு குடியேறிய இளைஞர்கள்!

04:49 PM Mar 26, 2025 IST | Murugesan M

திருப்பூரில் வாடகைக்குக் குடியேறிய இளைஞர்கள், உரிமையாளர் வீட்டைச் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இரங்கநாத புரம் பகுதியில்  சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டினை 10 நாட்களுக்கு முன் இளைஞர்கள் இருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அந்த இளைஞர்களுக்கும், அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டின் உரிமையாளர் சேகர், அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மது போதையில் உரிமையாளர் சேகரின் வீட்டை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINYoung people who rented a house damaged the owner's houseதிருப்பூர்
Advertisement
Next Article