For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகத் தற்கொலை பாதுகாப்பு தினம்!

06:21 PM Sep 10, 2023 IST | Abinaya Ganesan
உலகத் தற்கொலை பாதுகாப்பு தினம்

இன்று (செப்டம்பர் 10 ) உலக தற்கொலை தடுப்பு தினமாக முன்னெடுக்கப்படுகிறது. தற்கொலை என்பது தனிப்பட்ட முடிவு என்பார்கள். அது எப்படி தனிப்பட்ட முடிவாக இருக்க முடியும்? பாதிக்கப்பட்ட நபரைத் தவிர, தற்கொலை அவர்களின் அன்புக்குரியவர்களையும் பாதிக்கிறது அல்லவா?!

உலகம் முழுவதும் தினம்தோறும் அதிகரிக்கும் தற்கொலை எண்ணிக்கை, எதிர்கால தலைமுறை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 13 , 14 வயது குழந்தைகள் , இளைஞர்கள் என சிறகடித்து பறக்க வேண்டிய வயதினர்தான் இப்படியான தற்கொலை முடிவுகளால் மரணிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தமும், அது ஏற்படுத்தக்கூடிய விபரீத உணர்வுகளும்தான்.

Advertisement

தற்கொலை எண்ணம் வரும்பொழுது நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் பற்றி யோசிக்கவே கூடாது. எல்லோருக்குமே எதிர்காலம் என்ற ஒன்று உண்டு. கடினமான சூழலை எதிர்கொள்ள இந்த நேரம் சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக வாழ்க்கையும் , அனுபவங்களும் , வயதும் எல்லா சூழலையும் கடப்பதற்கான பக்குவத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்கொலை என்ணத்தில் இருக்கும் நபர்களில் பெரும்பாலோனோர், யாரிடமாவது ஆறுதல் தேடி அலைவார்கள். அல்லது தனிமையில் தங்களை கிடத்திக் கொள்வார்கள் . அப்படியானவர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களாக இருந்தால், அவரின் நலனில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. தற்கொலையை கணிப்பது எப்போதுமே கடினமாக இருந்தாலும், சில எச்சரிக்கை அறிகுறிகளை ஒருவர் கவனிக்கலாம் என்கிறார் மருத்துவர் சிங்.

Advertisement

தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு யாருடனும் இருக்கவே பிடிக்காது. சமூகத்தில் இருந்து தனித்து வாழவே விரும்புவார்கள். தன்னிடம் இருக்கும் பொருட்கள் அல்லது பிடித்தமானவற்றை அடுத்தவர்களிடம் கொடுப்பார்கள். mood swings என சொல்லக்கூடிய அதிகப்படியான மனநிலை மாற்றதுடன் காணப்படுவார்கள்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.

Advertisement
Tags :
Advertisement