உலகப் பொருளாதார மாநாட்டில் மகாராஷ்டிரா முதலமைச்சர் அதிரடி!
உலகப் பொருளாதார மாநாட்டின் முதல் நாளிலேயே 4.99 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
Advertisement
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், மாநாட்டின் முதல் நாளியே, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எஃகு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 92 ஆயிரம் வேலைகளை உருவாக்கும் நோக்கத்துடன், 4.99 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
குறிப்பாக, JSW குழுமத்தின் 3 லட்சம் கோடி முதலீடு, கல்யாணி குழுமத்தின் பாதுகாப்பு, மின் வாகனங்களில் 5,200 கோடி முதலீடு ஆகியவை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பரவலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் ஆற்றிய பங்களிப்பிற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.