உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது - அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்!
உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Advertisement
பதவியேற்பு விழாவில் பேசிய அவர், அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல் தடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.
உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவில் ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.
இனி அமெரிக்கர்களுக்கு அதிக வரி விதிக்கப்படாமல், வெளிநாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் அவர் தனது உரையில் கூறினார்.
ஒவ்வொரு நாடும் அமெரிக்காவை கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ட்ரம்ப், அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார்.