உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது - பிரதமர் மோடி பெருமிதம்!
உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஜோனாஸ் மாசெட்டி குழுவினரை சந்தித்த பிரதமர், வேதாந்தம் மற்றும் கீதை மீதான அவரது ஆர்வத்தைப் பாராட்டினார்
வேதாந்தம் மற்றும் கீதை மீது ஜோனாஸ் மாசெட்டி கொண்டுள்ள பேரார்வத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என்றார். ஜோனாஸ் மாசெட்டி குழுவினர் நிகழ்த்திய சமஸ்கிருத ராமாயண நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் பிரதமர் அவர்களைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஜோனாஸ் மாசெட்டி மற்றும் அவரது குழுவினரைச் சந்தித்தேன். வேதாந்தத்தின் மீதும், கீதையின் மீதும் அவருக்கு இருந்த ஈடுபாடு குறித்து ஏற்கனவே மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அவரது குழுவினர் சமஸ்கிருதத்தில் ராமாயணத்தின் காட்சிகளை வழங்கினர். இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார்.