உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்கில் ரிலீசானது கங்குவா - ரசிகர்கள் உற்சாகம்!
11:15 AM Nov 14, 2024 IST
|
Murugesan M
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக அளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீசானது.
Advertisement
எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு, சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவானது. இதில் சூர்யா பல விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல தடைகளுக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்வதற்கு உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவின் படம் உலக அளவில் 38 மொழிகளில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Advertisement
அந்த வகையில், சென்னையில் உள்ள காசி திரையரங்கில் சூர்யாவின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கவும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Next Article