உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்!
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 117-வது அத்தியாயத்தின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், அரசியலமைப்பே நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் என தெரிவித்தார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தியாவின் மைல்கல்லை கொண்டாடும் வகையில், நாடு தழுவிய பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
நாட்டின் குடிமக்களை அரசியலமைப்பின் பாரம்பரியத்துடன் இணைக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த வலைதளத்தில் அரசியலமைப்பை எண்ணற்ற மொழிகளில் படிப்பதுடன், அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம் எனவும் அவர் கூறினார்.
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் அவர் கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ், பிஜியில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து பிரதமர் விவரித்தார். ஃபிஜி மக்கள் எவ்வாறு தமிழ் மொழியைக் கற்கிறார்கள் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.