உலகின் பழமையான லிப்ஸ்டிக் ஈரானில் கண்டுபிடிப்பு!
ஆய்வாளர்கள் சமீபத்தில் 4000 ஆண்டு பழமையான லிப்ஸ்டிக்க்கை கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் பழமையான லிப்ஸ்டிக் அல்லது lip paint கூறப்படுகிறது.
இந்த லிப்ஸ்டிக் பார்ப்பதற்கு சிறிய அடர் சிவப்பு பேஸ்ட் நிரப்பப்பட்ட அலங்கரிக்கப்பட்ட கல் குப்பியில் தென்கிழக்கு ஈரானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்கு அதனை லிப்ஸ்டிக் என்று கூறுவதா? அல்லது லிப் பெயிண்ட் என்று கூறுவதா? என தெரியவில்லை, ஏன்னென்றால் அதன் தன்மை திரவம் போல் உள்ளதால் லிப் பெயிண்ட்டாக இருக்க வாய்ப்புள்ளதாக", முக்கிய ஆய்வாளர் மசிமோ விடாலே தெரிவித்துள்ளார்.
இந்த பழமையான லிப்ஸ்டிக் எங்கு கண்டெடுக்கப்பட்டது ?
1936 BC மற்றும் 1687 BC க்கு இடைப்பட்ட வெண்கல காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொருள், 2001 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, முதன்முதலில் புராதன கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, இது பிப்ரவரி மாதம் அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின்படி, ஈரானின் ஹலீல் நதிப் பள்ளத்தாக்கில் 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், வெண்கல காலத்தில் 'மர்ஹாசி நாகரிகத்தின் ' பண்டைய வாழ்வுமுறைகளை வெளிப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் ஈரான் நாகரிகம் மெசபடோமியாவுடன் சேர்ந்து செழித்தோங்கிய "சக்திவாய்ந்த" மக்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் இந்த பழமையான லிப்ஸ்டிக்க்குடன் ஆபரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது ஈரானின் பழங்கால சந்தைகளில் விற்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த லிப்ஸ்டிக் தற்போது ஈரானில் உள்ள ஜிரோஃப்ட் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய நவீன உலகத்தின் லிப்ஸ்டிக் அளவை காட்டிலும் இது சிறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரான் மைகிறோஸ்கோப் மூலம் ஸ்கேன் செய்த பிறகு, குப்பியில் உள்ள பொருட்களில் ஹெமாடைட், கருமையாக்கப்பட்ட மாங்கனைட் மற்றும் ப்ரானைட்டால் , மற்றும் கலேனா மற்றும் ஆங்கிள்சைட்டின் தடயங்கள், தாவர மெழுகுகள் மற்றும் பிற கரிமப் பொருட்களுடன் கலந்திருப்பதைக் கண்டறிந்தனர். இது அனைத்தும் இன்றைய நவீன காலத்தின் லிப்ஸ்டிக் உருவாக்க பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.