உலகின் மிகப்பெரிய AI தரவு மையம் : முந்தும் முகேஷ் அம்பானி - சிறப்பு கட்டுரை!
3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய AI தரவு மையமாகும். இந்த AI DATA CENTER, பெரும்பாலும் பசுமை ஆற்றலால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
இந்தியா இப்போது வெறும் தகவல் தொழில்நுட்ப மையமாக மட்டும் இல்லை. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் DATA CENTER தரவு மைய உள்கட்டமைப்பில், மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பக் கொள்கைகளால், நாட்டின் AI சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
AI அமைப்புக்களை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கும் இன்றியமையாத தரவு மையங்களை உருவாக்குவதற்கும், India AI MISSION திட்டத்தின் கீழ் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சர்வதேச நிறுவனங்கள், பசுமை மற்றும் ஆற்றல் திறன் கொண்ட தரவு மையங்களை நோக்கிச் செல்வதால், நிலையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கான பாதையில், இந்தியா முந்தி செல்கிறது.
மிகப்பெரிய AI- DATA CENTER கள், பெரும்பாலும் அமெரிக்காவில் மட்டுமே உள்ளன. அவையெல்லாம் ஒரு ஜிகாவாட்டுக்கும் குறைவான திறன் கொண்டவையாகும்.
இந்நிலையில், 3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜாம்நகரில் உருவாக்க உள்ளது. Nvidia நிறுவனத்துடன் சேர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில், ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. இது உலகின் மிகப் பெரிய AI DATA CENTER ஆகும்.
ஏற்கெனவே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மலிவு விலையில் சேவைகளை வழங்கி, தொலைத்தொடர்பு சந்தையை கைப்பற்றியது போல, இப்போது, AI DATA CENTER துறையில் கால் பதித்துளளது.
செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளுக்கான வளர்ந்து வரும் உலகளாவிய தேவையைப் பயன்படுத்திக் கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த AI DATA CENTER, இந்தியாவின் விரிவான டிஜிட்டல் நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Nvidia நிறுவனத்தின் மேம்பட்ட கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம், ரிலையன்ஸின் வலுவான உள்கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் இ-காமர்ஸ் போன்ற துறைகளில் AI பயன்பாடுகளுக்கான முக்கிய மையமாக ரிலையன்ஸின் AI DATA CENTER மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த AI DATA CENTER பெரும்பாலும் பசுமை ஆற்றலால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக, சூரிய, காற்று மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை ரிலையன்ஸ் உருவாக்கியுள்ளது.
Amazon Web Services (AWS), Microsoft Azure மற்றும் Google Cloud உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏற்கெனவே, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் அதிநவீன தரவு மையங்களுடன் தங்கள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துயுள்ளனர்.
Oracle, OpenAI மற்றும் SoftBank ஆகியவற்றுடன் இணைந்து AI உள்கட்டமைப்பில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உள்ளடக்கிய அமெரிக்காவின் Stargate Project திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும்,முகேஷ் அம்பானியின் AI DATA CENTER தனித்த அடையாளத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த திட்டம் குறித்து கூறிய முகேஷ் அம்பானி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை எளிதில் அணுகக்கூடிய வாய்ப்பாக இந்த திட்டம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
வருங்காலங்களில், உலக அளவில், AI தரவு மையங்களுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக,அடுத்த ஐந்து ஆண்டுகளில், திறன் தேவைகள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே பெரிய பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இதுவரை, இந்தியா மென்பொருளைத் தயாரித்து ஏற்றுமதி செய்தது. இனி எதிர்காலத்தில்,இந்தியா AI ஐ ஏற்றுமதி செய்யும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.