உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!
உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மோகன் பகவத், உலக அமைதி குறித்து பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாகவும், ஆனால் எங்கும் போர் ஓயவில்லை என கூறினார்.
இந்தியா முயன்றால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என அனைத்து நாடுகளும் நம்புவதாக குறிப்பிட்ட அவர், அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இந்தியாவின் கடமை என தெரிவித்தார்.
இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் உலக அமைதி சாத்தியமில்லை என பலர் எண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் குறித்து தாங்கள் அக்கறை கொள்வதாகவும், அதேநேரத்தில் வெளிநாடுகளில் உள்ள சிறுபான்மையினர் எத்தகைய சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை கவனித்து வருவதாகவும் மோகன் பகவத் தெரிவித்தார்.