செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உலக இதய தினம் !

02:28 PM Sep 29, 2023 IST | Murugesan M

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இதய இரத்தக்குழாய் நோய்களின் அறிகுறிகளையும், வகைகளையும் அறிந்து இதயத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக உலக இதய தினம் இருப்பதால் மக்களின் உயிர் காக்கும் இத்தினம், முக்கியத்துவம் பெறுகிறது.

வேர்ல்ட் ஹெல்த் பெடரேஷன் என்ற நிறுவனம் 1999 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார மையத்தின்(WHO) கூட்டமைப்புடன் உலக இதய தினத்தை கொண்டாடி வருகிறது. முதலில் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் இதய ரத்தக் குழாய் நோய்களால் உயிர் இழப்பு அதிகமாக ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் தொற்று அல்லாத நோய்களின் சதவிகிதத்தை 25% ஆக 2025 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், 2012 முதல் செப்டம்பர் 29ஆம் தேதியை உலக இதய தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 90 நாடுகளுக்கும் மேல் இதில் பங்கேற்று உலகெங்கிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் உலக இதய தினத்திற்காக ஒரு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப்பற்றிய கட்டுரைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த வருட தலைப்பு "இதயத்தை உபயோகித்து, இதயத்தை அறிந்து கொள்" என்பதே ஆகும். அதாவது ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதே இத்தலைப்பின் நோக்கம்.

உடலில் அதிக இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பின் அளவு இல்லாமல் பார்த்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய உப்பை, உணவில் குறைத்துக் கொள்வது இருதய நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொண்டு, அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சிகிச்சை எடுப்பது உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறையை கைவிடுவது புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது அவ்வப்போதைய உடல்நல பரிசோதனைகளை செய்து கொள்வது ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பதும் மன உளைச்சலை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நன்றாக உறங்குவது போன்ற செயல்களை செய்தல் நாமும் நம் இதயமும் ஆரோகியமாக இருக்கும்.

Advertisement
Tags :
heart dayMAIN
Advertisement
Next Article