உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
Advertisement
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர், ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இதனை தொடர்ந்து, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிற்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி மற்றும் நித்யஸ்ரீ சுமதிக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.