உலக செஸ் தொடர் : 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தோல்வி!
11:10 AM Dec 10, 2024 IST
|
Murugesan M
உலக செஸ் தொடரின் 12வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரெனிடம் தோல்வியடைந்தார்.
Advertisement
சிங்கப்பூரில் நடைபெறும் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12வது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனும் சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென் உடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார்.
இப்போட்டியில் கருப்புக் காய்களுடன் விளை குகேஷ், 39 நகர்த்தலுக்கு பின் தோல்வியை தழுவினார். இதனால், இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.
Advertisement
நாளையும், நாளை மறு நாளும் நடக்கும் அடுத்த இரு சுற்றுகளில் 1 புள்ளி 5 புள்ளிகள் கூடுதலாக பெறுபவர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement