செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து - தவெக தொண்டர்கள் இருவர் பலி!

03:31 PM Oct 27, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தவெக மாநாட்டிற்காக சென்ற கட்சி தொண்டர்கள் 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.  இதற்காக பிரம்மாண்ட முறையில் இருக்கைகள், மேடை, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியிலிருந்து கட்சித் தொண்டர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில், தவெக நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
Tags :
3 diedKallakurichi district.MAINtamilga vetri kalzhamUlundurpet
Advertisement