உள்துறை செயலாளருக்கு கடிதம் - காத்திருப்போர் பட்டியலில் காவல் ஆய்வாளர்!
03:48 PM Jan 17, 2025 IST
|
Sivasubramanian P
தமது பணியில் தலையீடு உள்ளதாக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Advertisement
தமிழக உள்துறை செயலாளருக்கு, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அண்மையில் ஒரு கடிதம் எழுதியருந்தார். அதில், தனது காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்களை தமக்கு தெரியாமல் வேறு இடத்திற்கு பணி அமர்த்தும் செயல்கள் நடைபெறுகின்றன எனவும், இதனால், தனது பணியை தொடர இயலவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ் குமார் பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article